FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 18, 2014

பெரம்பலூர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,ஜன.17–

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற பிப். 28ம் தேதிக்குள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலுர் கலெக்டர் தரேஷ் அகமது தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:– அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து பிப். 28ம் தேதிக்குள் பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2012 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ– மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதுரக் கல்வி பயிலுபவராக இருக் கலாம். மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை ஒரு போட்டோ மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பிப். 28ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thanks to

No comments:

Post a Comment