FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 2, 2014

கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ

02.01.2014 கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷோ நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை, கோவில்பட்டி ஆஸ்கர்- வி.வி.ஜே. கல்வி நிறுவனங்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷா நிகழ்ச்சி நடந்தது. உலகத்தில் இறைவன் படைப்பில் மனிதன் பிறப்பில் சில குறைபாடுகளுடன் பிறக்கிறான். குறைபாடுயுடன் பிறக்கின்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போல நம்மாலும் செயல்பட முடியாமல் உள்ளது என்று ஏக்கககளுடன் வாழ்கின்றன. சிலருக்கு கை கால்,கண் மற்றும் காது உள்ளிட்ட மனித உறுப்புக்கள் குறைபாடுகளுடன் இருப்பவர்கள் செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகளை பயன்படுத்தி மற்றவர்களை போல நாமும் செயல்படமுடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் பல தடைகளை தகாந்தெறிந்து வெற்றிகளை பெற்றவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ ஆனால் பிறப்பிலேயே இரண்டு கைகள் கால்கள் ஊணமாக பிறக்கின்ற குழந்தைகள் பிறர் உதவியுடன் தாங்களது அன்றா காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக சழுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களும் தாங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் அருகே ஓரு கிராமத்தில் பிறந்த குழந்தை இரண்டு கைகள் மற்றும் கால்கள் சுருங்கியுள்ளது. அவரது குடும்பம் வறுமைகோட்டிற்கு உள்ளது. ஆரம்ப காலங்களில் இவரது தந்தை பல மருத்துவர்களிடம் தனது குழந்தையை காண்பித்து மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். இன்று குழந்தை 27வயது பெண்னாக இருந்தாலும் பார்ப்பதற்கு 5 மாத குழந்தை தரையில் படுத்து இருந்த எப்படி இருக்குமோ அதை போன்ற உள்ளது. இந்த குழந்தையை கடந்த 28வருடங்களாக அவரது குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே பாதுகாத்து வருகின்றனர். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ இந்த பெண்னுக்கு உதவுவதற்காக நல்ல உள்ளங்கள் படைத்த நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி உள்ள வி.வி.ஏ கல்வி நிறுவனங்கள் இனைத்து அந்த பெண்னுக்கு உதவும் வகையில் சமுதாயத்தில் உயர்ந்த உள்ளம் படைந்த தொழிலதிபர்களுடன் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் திரில் ஷோ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி அதன் முலம் வருகின்ற நிதியை அவர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பது மிகப் பெருமை உள்ளது. இது போன்ற நம் சமுதாயத்தில் நல்ல உள்ளமும் கருனை கொண்ட பெரியோர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளார்கள். அவர்களும் தாங்களால் முடிந்த பொருள் உதவியை அளிக்க முன்வரவேண்டும். கோவில்பட்டியில் நடைபெற்ற திரில ஷோ நிகழ்ச்சிக்கு ஆஸ்கர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழில் அதிபர் பெரியசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜீ திரில் ஷோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர், ஒற்றைக் காலுடன் நடனமாடிய காட்சி, மற்றொரு வாலிபர் டியூப் லைட்டுகளை உடைத்து தின்ற காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது. மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் இணைந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்.செ.ராஜீ ரூ.5 ஆயிரமும், முன்னாள் நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ரூ.5 ஆயிரமும் ஜானகி அம்மாள் அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கினர். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த சாகச நிகழ்ச்சியில், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியான திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யாவின் சிகிச்சைக்காக நிதி வழங்கப்பட்டது. அவர் கண் பார்வை பெற்ற நிலையில், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறினார். ஐஸ்வர்யாவின் உயர் கல்வி செலவை ஆஸ்கர் கல்வி நிறுவனம் ஏற்பதாக தாளாளர் சுப்புராஜ் தெரிவித்தார். உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியான திருமங்கலம் சாத்தன்குடியைச் சேர்ந்த தெய்வகுரு மகள் பிரேமலதாவின் (வயது 27) சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் மாற்றுத் திறனாளிகளின் சிகிச்சைக்காக நிதி வழங்கினர். ரோட்டரி சங்க மண்டல தலைவர் விநாயகா ரமேஷ், மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ. தாளாளர் ஆம்ஸ்ட்ராங், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் குமார், ரோட்டரி சங்க தலைவர் வீராசாமி, செயலாளர் ஜெயபிரகாஷ், நாராயணசாமி,ஜானகி அம்மாள் அறகட்டளை நிருவனர் ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை வின்சென்ட், ஆஸ்கர் கேட்ரிங் முதல்வர் அழகுமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Thanks to  One India..

No comments:

Post a Comment