FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 5, 2014

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள்

04.01.2014, அரியலூர், -

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

கண் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய படிவம் பெற்று 28.02.2014க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எழுதபடிக்க தெரிந்தவர்கள் (கண் பார்வையற்றவர்கள் எழுத படிக்க தேவையில்லை) முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொது வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களும், பெற்ற வர்களும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெறலாம்.

உதவித்தொகை
இத்திட்டத்தின் கீழ் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வும் அதற்கு கீழ் உள்ள கல்வித் தகுதிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும். மேல் நிலை (பன்னிரண்டாம் வகுப்பு) கல்வித் தகுதி தேர்வுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.375 வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்படும்.

தகுதிகள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும் அதாவது 31.3.2013 அன்றோ அல்லது அதற்கும் முன்னதாக பதிவு செய்தவராக இருக்கலாம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 31.3.2014 அன்று 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

வருமானம்
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயில்பவராக இருக்கலாம்.

மனுதாரர் சுயமாக எதுவும் தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்ப வராகவோ இருத்தல் கூடாது

புதிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 28.02.2014 வரை அலுவலக வேலை நாளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டும் பெறப்படும். மனுதாரர் விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்வதற்கு பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள். மாற்றுச் சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங் களுடன் வருகை தர வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Thanks to 

No comments:

Post a Comment