FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகை: கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை, ஜன. 29–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பல்வேறு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக் கடன், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள்

கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தீத்திபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி ரஞ்சிதாவின குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். முருகன், தனித் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் வெங்கடாச்சலம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சி) செல்வம், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திருஞானம், மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Maalaimalar

No comments:

Post a Comment