22.01.2014, புதுச்சேரி
காதுகேளாதோர் வாய்ப்பேசமுடியாதோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள குறுந்செய்தி அனுப்பும் வசதியை தடுக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 குறுந்செய்தி மட்டுமே அனுப்பமுடியும் என்ற பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்பேசி நிறுவனங்களின் கட்டுபாட்டை உடனடியாக தளர்த்த வேண்டும்.சலுகை கட்டணத்தில் குறுஞ்செய்தி அனுப்ப திட்டங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் இச்சலுகை மறுக்கப்பட்டு முழு கட்டணம் என்ற பெயரில் குறுஞ்செய்திக்கு கூடுதல்தொகை வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.ஒரு நிமிட தொலைப்போசி உரையாடலை காதுகேளாதவாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் குறுஞ்செய்தி மூலம் உரையாடினால்,குறைந்தபட்சம் 20குறுஞ்செய்திகள் அனுப்ப நேரிடுகிறது எனவே முழுகட்டணத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காதுகேளாதோர் கூட்டுறவு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.லட்சுமனன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசினார்.புதுச்சேரி தலைவர் ராஜாங்கம்,புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு செயலாளர் பாலமுருகன்,எல்ஐசி முகவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராம்ஜி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment