FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 16, 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

சென்னை , 16 January 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தங்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதோடு, சலுகைக் கட்டணத்துக்குப் பதில் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு கடந்த 29-10-2008 அன்று அரசாணை (எண்.153) ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ரயில்களில் உள்ளதுபோல் அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் மாற்றுத் திறனாளிகள் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டும் (75 சதவீத கட்டணச் சலுகை) செலுத்தி பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்டது.

இதுபோல் 31-6-2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் (எண்.18), உதவியாளரின் துணையின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத் திறனாளிகளுடன் ஒரு துணையாளர் மாநகர பஸ்கள் மற்றும் ஏ.சி. பஸ்களைத் தவிர பிற பஸ்களில் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணைகளை நடத்துனர்கள் மதிப்பதே இல்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்ற மாற்றுத் திறனாளிகளும் இந்த பாதிப்புகளுக்கு உள்ளானதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன் கூறியது:

சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களில் மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கவேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இந்தச் சலுகையை அளிக்க நடத்துனர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு பஸ்ஸில் அதிகபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஏற்றிக் கொள்ள நடத்துநர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் பல மணி நேரம் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
.....2

மேலும் புதுச்சேரி வழியாகச் செல்லும் பஸ்களில், அந்த மாநிலத்துக்குள் பயணம் செய்யும்போது கட்டணச் சலுகை மறுக்கப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால், பயணிப்பது தமிழக அரசு பஸ்ஸாக இருந்தபோதும் புதுச்சேரி வேறு மாநிலம், எனவே அரசாணை இங்கு செல்லாது என்கின்றனர்.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து கடலூர் செல்லும் மாற்றுத் திறனாளியிடம், சென்னையிலிருந்து புதுவை எல்லை வரை நான்கில் ஒரு பங்கு சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் புதுவையிலிந்து கடலூர் எல்லை வரை முழு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் கடலூர் எல்லையிலிருந்து 75 சதவீத கட்டணச் சலுகையை அளிக்கின்றனர். இதற்காக இரண்டு முறை ஆவண நகல்களையும் மாற்றுத் திறனாளிகள் அளிக்க வேண்டியுள்ளது.

மாநகர பஸ்களில்: மாநகரப் போக்குவரத்துக்கழகத்தைப் பொருத்தவரை, மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று வருவதற்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

செங்குன்றத்திலிருந்து கோட்டூர்புரத்துக்கு பணிக்குச் செல்லும் மாற்றுத் திறனாளி முதலில் கிண்டி தொழிற்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து 21ஜி பஸ்ஸில் கோட்டூர்புரத்துக்கு செல்ல வேண்டும்.

ஆனால், மாலையில் வீடு திரும்பும்போது, 21ஜி பஸ் கிண்டி தொழிற்பேட்டைக்கு வருவதில்லை. மாறாக எதிர்ப்புறத்தில் கிண்டி பாலத்துக்கு பின்புறம் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து மாற்றுத் திறனாளிகள் கிண்டி தொழிற்பேட்டைக்கு நடந்து வருவது சிரமம். இதனால், வேளச்சேரியிலிருந்து வரும் ஜி70 பஸ்ஸில் கிண்டி தொழிற்பேட்டைக்குச் செல்லும் நிலை உள்ளது.

அவ்வாறு செல்லும்போது ஜி70 பஸ்ஸில் முழு டிக்கெட் கட்டணத்தை மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டியுள்ளது. அரசாணைப்படி நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க மறுக்கின்றனர்.

இதனால், மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அரசாணைகளை போக்குவரத்துக்கழகங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிடவேண்டும் என்றார்.

Thanks to

No comments:

Post a Comment