16 January 2014
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மசோதா பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் "சமர்த் 2014' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாகவும், ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை சமூக நீரோட்டத்துடன் அரசு இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும்.
அவர்களது சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அவர்களின் பிரச்னைகளை நாம் மருத்துவ ரீதியில் மட்டுமே அணுகுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.
Thanks to

No comments:
Post a Comment