29.01.2014
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் ரூபாய் செலவில், ஆரம்ப நிலைபயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச் சத்துமாவும் வழங்கும் திட்டம், சமூகநலத்துறை சார்பில் சென்னையில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 6 வயதிற்குட்பட்ட மாற்றத்திறனாளி குழந்தைளுக்கான 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ள குழந்தைளுக்கு நுண்ணூட்டச் சத்துமாவும் மதிய உணவும் வழங்கும் திட்டத்திற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 46 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, செவித்திறன், பார்வைத்திறன், மனவளர்ச்சி குன்றிய சென்னையில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 5 ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் உள்ள 125 குழந்தைகளுக்கு மதிய உணவும், சத்துமாவையும், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திரு. சிவசங்கரன், மாநில ஆணையர் டாக்டர் மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இணை உணவான நுண்ணூட்டச் சத்துமாவும், முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும் குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச்சத்து மாவும் வழங்கும் திட்டம், வரும் 3-ம் தேதி முதல் செயல்படதொடங்கும் என்றும், இதன்மூலம், 87 பயிற்சி மையங்களிலும் பயிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவதில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks to Jaya TV News

No comments:
Post a Comment