FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, January 27, 2014

மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடம் தாசில்தார் அலுவலகம் அருகே வீண்

 26.01.2014 பெருந்துறை:
பெருந்துறை நகரில், ஒரே வளாகமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது. அங்கு வரும் மக்கள் பயன்பாட்டுக்கு, பொது கழிப்பிட வசதியில்லை. அதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகில், மாற்று திறனாளிகளுக்கு, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் பயன்பட்டுக்கு திறந்து விடாமல், பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர்.
பெருந்துறை நகரில் கிளை கருவூலகம், சார்பு நீதிமன்றம், கிளை சிறை சாலை, போலீஸ் ஸ்டேஷன், நடுவர் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், தொகுதி அரசு தேர்தல் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அருகில் வட்ட வழங்கல் அலுவலகம், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த அரசு அலுவலகங்களை நாடி தினமும், நூற்றுக்கணக்கான மக்கள், பெருந்துறை தொகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து, செல்கின்றனர். பல்வேறு பணிக்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், சிறுநீர் கழிக்க, கழிப்பிட வசதியில்லாமல், நாள் முழுக்க தடுமாறுகின்றனர். இதில் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாது.
தாசில்தார் அலுவலகம் அருகில் மாற்று திறனாளிகளுக்கு, அரசு சார்பில் புதிதாக, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை திறக்காமல், பூட்டி வைத்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், என்பது மக்கள் கோரிக்கையாகும்.
கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மேலும் ஒரு பொது கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டி, மக்கள் அவதியை போக்க வேண்டும், என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
Thanks to 

No comments:

Post a Comment