விருதுநகர் , 22 January 2014
விருதுநகர் மாவட்டத்தில் செவித்திறன் குறைவுடைய சிறுவர், சிறுவர் சிறுமிகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இம்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செவித்திறன் குறைபாடுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பேச்சு மொழி பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிலும் இப்பயிற்சி மையங்களில் செவித்திறன் குறைவுடையவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கு 6 மாதம் முதல் மூன்றரை வயதிற்கு உள்பட்ட செவி்த்திறன் குறைவுடைய சிறுவர், சிறுமிகளாக இருக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு இரண்டு செவிகளில் பொறுத்துவதற்கான செவித்துணை கருவிகளைக் கொண்டு பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவை சிறப்பு உபகரணங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. அதையடுத்து, தொடர்ந்து 6 வயதில் சாதாரண பள்ளியில் சேர்ந்து முதல் வகுப்பு படிப்பதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை நேரில் அணுகி, ஆரம்ப கால பயிற்சி மையத்தில் சிறுவர், சிறுமிகளை சேர்த்து பயனடையும்மாறு பொதுமக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Thanks to

No comments:
Post a Comment