FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 1, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு

01.01.2014, விருதுநகர்:
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:
பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்களிலும், இனிமேல் ஏற்படக்கூடிய காலி பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்விற்கான சிறப்பு பயிற்சிக்கு திட்டமிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரின் மையப்பகுதியில் அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் பார்வையற்றோர் பயன்படுத்த ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 50 நபர்களை கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய இரண்டு அறைகள் இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஈரோடு, விழுப்புரம், வேலு£ர், கோயம்புத்து£ர், சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் மூன்று அறைகள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தின் பெயரை அனைத்து நிறுவன முதல்வர்களும் ஜன. 6ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுநகர் எஸ்எஸ் சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment