FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, January 24, 2014

காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

23.01.2014, புதுவை,
காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஸ்எம்எஸ் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காது கேளாதோர் கூட்டுறவு அமைப்புத் தலைவர் சரவணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இதுகுறித்து புதுவை காதுகேளாதோர் கூட்டுறவு அமைப்பு தலைவர் சரவணன் கூறியது:

செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களும், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை சலுகைக் கட்டணத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப திட்டங்கள் வைத்துள்ளன.

ஒரு தொலைப்பேசி உரையாடலை, 20 எஸ்எம்எஸ்க்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தெரிவிக்க வேண்டிய சூழலில், ஒரு நாளில் ஒரு எண்ணில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கொண்டு வந்தது.

இதுதவிர பண்டிகை காலங்களில் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கையை நீக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்புக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு காணும் வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment