FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, January 27, 2014

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு இலவச ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

26.01.2014
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகளில் மாணவ–மாணவியர், பணிக்கு செல்பவர் மற்றும் சுயதொழில் புரிபவர் என்ற முன்னுரிமையில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வருடத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின்படி மேற் குறிப்பிட்ட தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு மேற்படி பொது திட்டத்தின் கீழ் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்பும் இரண்டு கால்களும் செயல் இழந்த, ஊன்றுகோல் உதவியுடன் நடக்கக்கூடிய 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வழங்க ஏற்கனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

ஸ்கூட்டர் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி நிலையச்சான்று, பணிச்சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment