FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 4, 2014

மருத்துவ முகாமில் ஆலோசனை பெற நீண்டநேரம் நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதி போதிய அளவில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

04.01.2014, தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க போதிய அளவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றத்திறனாளிகள் அவதி
தர்மபுரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வாரமும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பரிந்துரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும்போது டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சமயங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்றபடி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இருக்கைகள் அமைக்க கோரிக்கை

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மருத்துவ ஆலோசனைகளை பெற இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைகள் மற்றும் கால்களில் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் டாக்டர்களை சந்திக்க நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும்போது உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பென்ஞ்சுகளை போதிய அளவில் அமைத்து அவர்களை உட்கார வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களுக்கு வந்த நேரத்தின் அடிப்படையில் டோக்கன் வழங்கினால் அந்த எண் வரிசைப்படி டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற முடியும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Thanks to

No comments:

Post a Comment