FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 23, 2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி, -20.01.2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 70 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்குள் மக்கள் மனு கொடுக்க செல்லும் வாசல் பகுதியில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கோஷம் எழுப்பியடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை கூட்டரங்கை நோக்கி வீசி எறிந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சிலர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

கூட்டரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமியை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கூறு கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி அடையாள அட்டையை தவிர எந்தவித நலத்திட்டமும் கிடைக்கவில்லை. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, தொழிற்கடன், வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும். தாட்கோவில் கடன் பெற முயன்றால் அதி காரிகள் எங்களை வேண்டா வெறுப்புடன் பார்க்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்டங்களை தடைகள் இன்றி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment