FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, January 10, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச எஸ்எம்எஸ் வசதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்


சென்னை, ஜன.8-காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கைபேசிகளில் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து தரப்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம், சென்னை காதுகேளாதோர் சங்கம் சார்பில் சென்னையில் புதனன்று (ஜன.8) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி “செல்போன் வைத்திருக்கும் அனைவரும் குரல் வழியாகவும், குறுஞ்செய்தி வழியாக பேசி வருகிறார்கள். மாற்று திறனாளிகள் குறிப்பாக காது கேளாதோர் எந்த நபருக்கும் பேச இயலாது எனவே அவர்கள் குறுஞ்செய்தி வழியாக பேசி வருகிறார்கள், இந்த குறுஞ்செய்தி சேவைக் கட்டணத்தை பண்டிகை காலங்களில் மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தி விடுகிறார்கள், இதனால் காது கேளாதோர் மற்றவர்களுக்கு முக்கிய தகவல்களைக் கூட தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு மேலும், ஒரு நாளைக்கு 100, எஸ்எம்எஸ் தான் ஒரு சிம் கார்டிலிருந்து அனுப்ப முடியும் என்கிற கட்டுப்பாடும் இந்த தகவல் தொடர்பு சாதனத்தை மட்டுமே நம்பியுள்ள காதுகேளாத வாய்பேசாதோரை மிகக் கடுமையாக பாதிக்கின்றது. தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கோடு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றால், மாற்று திறனாளிகளுக்கு துணையாக இருக்க வேண்டிய பொதுத் துறை பிஎஸ்என்எல் நிறுவனமும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மாற்று திறனாளிகளுக்கு எதிராக உள்ளது.எனவே அரசு பண்டிகை காலங்களில் குறுஞ்செய்திகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், மாற்று திறனாளி ஒருவர் புதிய சிம்கார்டு வாங்கினால் மாற்று திறனாளி என்பதற்கான அடையாள அட்டையை இணைத்து குறுஞ்செய்தி இலவசமாக அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர் ஏ.கிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் முருகன், சென்னை காதுகேளாதோர் சங்கத்தின் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Thanks to

No comments:

Post a Comment