FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, January 8, 2014

ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாது கலெக்டர் பேச்சு

08.01.2014, பெரம்பலூர், :
ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக் கூடாது என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டார்.

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் தரேஸ் அஹமது பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1862 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 15 லட்சத்து, 37ஆயிரத்து, 400 மதிப்பிலான நலத் திட்டஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் ஏற்பட்ட குறைபாடுகளை தடையாகக் கருதாமல் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிகளைக் கண்டறிந்து முன்னேற வேண்டும். உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்த மிகப் பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு மாற்றுத்திறனாளியாவார்.

மேலும், விளையாட்டு, கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். எனவே ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மனம் தளராதீர்கள் என்றார்.
விழாவில் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய் தளங்களை அமைக்க உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைமூலம் 10 பேருக்கு ரூ5.40 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், 25 பேருக்கு ரூ1.08 லட்சம் மதிப்பிலான காது கேட்கப் பயன்படுத்தும் கருவி, ஒருவருக்கு ரூ. 90ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு டிஆர்ஓ சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் சேகர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதை ராஜ், வெண்ணிலா, ஜெயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுதாதேவி, இந்தோ அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முகமது உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment