FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

11.01.2014,
காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவியை மீண்டும் பல்கலையில் சேர்க்க வலியுறுத்திமதுரையில் உண்ணாவிர தப் போராட்டம் நடை பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவி முனைவர் பி.ஜே.ஈஸ்வரி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கடும்நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்.

மனிதாபிமானமற்ற முறையில் சர்வாதிகாரமாக நிர்வாகம் நடத்தும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை காளவாசலில் நடைபெற்ற உண்ணாவிர தத்திற்கு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.வெற்றிவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.அரவிந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர்போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநிலச்செய லாளர் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு இணை அமைப்பாளர் பி.விஜயகுமார், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), செல்லக்கண்ணு (விவசாயிகள் சங்கம்), வி.பூமிநாதன் (விதொச), வி.உமாமகேசுவரன் (வாலிபர் சங்கம்), எம்.கண்ணன் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment