FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 12, 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரைவு மசோதா: வெளியிடக் கோரிக்கை

சென்னை, 07 January 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட வரைவு மசோதா பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீபக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஐ.நா. சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1996-இல் சில மாற்றங்களை செய்து, அந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், ஐ.நா. சட்டத்தில் இடம்பெற்றிருந்த பல முக்கிய ஷரத்துக்கள், இந்த மசோதாவில் இடம்பெறவில்லை.

அதாவது மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வகையில் முழு சட்ட உரிமையைப் பெற ஐ.நா. சட்டம் வழிவகுக்கிறது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், மசோதா மீதான கருத்துக் கேட்பின்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவடைந்தபின்னர், வரைவு சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ÷ஆனால் திருத்தப்பட்ட வரைவு மசோதா இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வரைவு மசோதா பெறப்பட்டு, அதனடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment