FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 9, 2014

பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம்

09.01.2014, சென்னை:
பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறியது:-

தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்ப சலுகைக் கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை நாள்கள் மற்றும் சில அரசு விடுமுறை தினங்களின் போது இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எஸ்.எம்.எஸ். வாயிலாகவே தங்கள் தகவல்களை பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது என்றால் அரசுத் துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் எஸ்.எம்.எஸ்-க்கு பண்டிகை நாள்களில் கட்டணம் வசூலிக்கின்றது.

இதனைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தவிர கடலூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 15 இடங்களிóல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment