உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் நல உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழக மேற்கு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்ஆகியோர் பேசினர்.விழாவில் உடுமலை, அவினாசி, காங்கயம், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்படும் வங்கிக்கடன் தொகைக்கு ஜாமீன் கேட்கும் விதியை தளர்த்த வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஒரே பஸ்சில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பிடங்கள் நடத்தும் உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வீடு இல்லாத 1,500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment