FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, May 8, 2016

ஆங்கிலப் படத்தில் அபிநயா

03.05.2016
'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத் திறனாளி அபிநயா, இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 25.

அபிநயா நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் "துடி', "அடிடா மேளம்', "நிசப்தம்', "விழித்திரு'. "துடி', மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படம். "விழித்திரு'வில், அபிநயா ரேடியோ ஜாக்கியாக வருகிறார் .

இந்தியப் படங்களில் நடித்திருந்தாலும், ஆங்கில படத்தில் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. one little finger (ஒரு சிறு விரல்) ஆங்கிலப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை, கொல்கத்தா வரைப் பறந்துபோய், கதை கேட்டு ஓகே சொல்லி, நடித்து முடித்து, அந்தப் பாக்கியையும் சரிசெய்து விட்டார். இந்த ஆண்டு வெளிவரும் இத்திரைப்படம், திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வாரிக் கொள்ளும் என்று பேச்சு இப்போதே அடிபட ஆரம்பித்துவிட்டது.

'ஞய்ங் கண்ற்ற்ப்ங் ஊண்ய்ஞ்ங்ழ்' படத்தைத் தயாரித்து இயக்குபவர், அகாதெமி விருது பெற்றிருக்கும், கின்னஸ் புக்கில் இடம் பிடித்திருக்கும் இசை அமைப்பாளர் ரூபம் சர்மா. அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கக் குறைவில் சாத்தியங்கள் தான் படத்தின் கதை.

""இனி அபிநயா, தங்கை மாதிரியான சிறு வேடங்களில் நடிக்கமாட்டார்... முழுநீள வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அபிநயா திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுமையுள்ள வேடங்கள் வந்தால் அபிநயா நடிப்பார்'' என்கிறார் அபிநயாவின் தந்தை ஆனந்த்.

அபிநயா மாற்றுத் திறனாளியாக இருப்பதினால்தான், ஞய்ங் ப்ண்ற்ற்ப்ங் ச்ண்ய்ஞ்ங்ழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் பொது நல சேவகராக லீட் ரோலில் நடிக்கும் அபிநயா, போதைப் பொருள்களைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடன் 56 மாற்றுத் திறனாளிகள் படத்தில் நடிக்கிறார்கள். அபிநயாவுக்கு ஜோடியாக வருபவர், நிஜ வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆண் மாற்றுத் திறனாளி. படம் அஸ்ஸôமிலும், கொல்கொத்தாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஒரு சுமை என்று 38 சதவீதத்தினர் கருதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளிடம் பேசுவது, பழகுவது, அவர்களைப் பராமரிப்பது பற்றி தெரியாததினால் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி விடுகிறோம். இப்படி சொல்பவர்கள் 65 சதவீதம்பேர். மாற்றுத் திறனாளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... வயது கூட கூட, உடல் இயலாமை பிரச்னையை நாமும் எதிர் கொள்ள வேண்டிவரும். நமக்கும் பிறர் தயவை நாடும் நிலை வரலாம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களை மதியுங்கள். யாராவது மாற்றுத் திறனாளி எதிர்பட்டால்... அவருக்கு உதவுங்கள். அவர்களிடம் இரக்கப் பார்வையைக் காட்டாதீர்கள். அன்பு, கனிவு காட்டுங்கள்.. அவர்களும் நம்மைப் போன்ற மனித உயிர்தான்.. படத்தில், இசை மூலம் சிகிச்சை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் படம் மாற்றுத் திறனாளி குறித்த பல கற்பிதங்களுக்கு ஒரு கண் திறப்பாக அமையும்'' என்கிறார் ரூபம் சர்மா.

No comments:

Post a Comment