FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, May 8, 2016

தலையில் கல்லைப் போட்டு மனைவி, மகள் கொலை:DEAF மாற்றுத்திறனாளி கைது

04.05.2016
காட்பாடியில் மனைவி, மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வாய் பேச முடியாத கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்புப் பகுதி கோயில் முன் பகுதியில் உள்ள இடத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பிரகாஷ்(30), தனது மனைவி மீனா (28), 6 வயது மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். இவர் குப்பைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாவும், அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களின் அருகே ரத்தக் கறையுடன் நின்ற பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்ததை பிரகாஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment