FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, May 22, 2016

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை நாடு முழுவதும் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

 புதுடில்லி 18.05.2016
மாநில அரசுகளால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையர்களின் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:
தற்போதுள்ள சட்ட நடைமுறையின்படி, ஒரு மாநில அரசால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், மற்றொரு மாநிலத்தில் செல்லாது. இதனால், பணியிட மாற்றம், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல நேர்ந்தால், அங்கு அரசின் சலுகைகளை தொடர்ந்து பெறுவதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், மாநில அரசுகளால் ஒருமுறை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நாடு முழுவதும் அல்லது அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செல்லத்தக்க வகையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான 2014-ஆம் ஆண்டு சட்டத்தில் புதிய பிரிவு விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சட்டமுன்வரைவு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பெயர், முகவரி, அலைபேசி எண், வங்கிக் கணக்கு விவரம், உடலுறுப்பு பாதிப்பின் வகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நவீன அடையாள அட்டை வழங்கும் திட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்பு, மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் இணையம் வழியாகவே தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கெலாட் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான சட்ட விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

No comments:

Post a Comment