10.05.2016, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.
இயக்குநர் சசி ஆனந்த் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். பிரிவில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு தற்போது வழங்கப்படுகிறது. இவர்களில் 350 பேர் 2 முதல் 4 நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.6.90 லட்சம் கிடைக்கு என்றார்.
விப்ரோ நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவி பத்மஜாவிற்கு, விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை மேலாளர் வில்வநாதன் வெங்கடசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment