FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 18, 2016

பிளஸ்–2 தேர்வில் DEAF மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் முதலிடம்

17.05.2016, குன்னூர்,

பிளஸ்–2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பிளஸ்–2 தேர்வு

காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான பிளஸ்–2 தேர்வில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:–

தமிழ்–110, கணினி அறிவியல்–118, பொருளாதாரம்–116, வணிகவியல்–108, கணக்குப்பதிவியல்–123. மொத்தம்–575.

மாணவர் நாகராஜின் தந்தை சுந்தரம். தாயார் தமிழ்செல்வி. இவர்கள் மஞ்சூர் அருகே உள்ள குட்டிமணி நகரில் வசித்து வருகிறார்கள். மாணவர் நாகராஜ் தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டராக விருப்பம்

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளார். இவருடைய தந்தை ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. சிந்துஜாவுக்கு சுஜித் (15) என்ற தம்பி உள்ளார். இவரும் அதே பகுதியில் 9–வது படித்து வருகிறார். இவருக்கும் வாய் மற்றும் காது கேட்காது. சிந்துஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:– தமிழ்–98, இயற்பியல்–112, வேதியியல்–109, தாவரவியல்–98, உயிரியல்–80. மொத்தம்–497.

மாணவி சிந்துஜா தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– நான் மற்ற மாணவ–மாணவிகள் படித்து வரும் வகுப்பில் படித்து வருகிறேன். ஆசிரியர், ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்கள் வாய் அசைவில் அதனை புரிந்து கொள்வேன். வகுப்பை நன்கு கவனித்து விட்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாடங்களை படிப்பேன். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஊராட்சி மூலம் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளேன். மாற்றுத்திறனாளி என்பதால் எனது மேல்படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment