27.05.2016
புதுடெல்லி - நாட்டில் உள்ள காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாமல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5கோடி நிதி உதவியளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இந்த தகவலை காது கேளாதோர் கிரிக்கெட் சொசைட்டி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங் மனோகர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆகியுள்ளார்.
எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளவயது தலைவராக 41 வயது அனுராக் தாகூர் தற்போது பதவியேற்றுள்ளார். தலைவராக பதவியேற்றுள்ள அனுராக் தாகூரை காது கேளாதோர் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு தாகூர் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்காக ரூ. 5கோடி நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.
இது குறித்து, காது கேளாத கிரிக்கெட் சொசைட்டியின் (டி..சி.எஸ்) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது., இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிதியுதவியை அடுத்த 5ஆண்டுகளுக்கு அளிப்பதாக அனுராக் தாகூர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:
Post a Comment