25.05.2016.
மத்திய அரசின் "மாற்றுத் திறனாளிகள்' அதிகாரமளித்தல் துறையின் பெயரை, "அதீத திறமை கொண்டவர்கள்' துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஹிந்தியில் "விக்லாங்ஜன்' (மாற்றுத் திறனாளிகள்) என்பதற்குப் பதிலாக, இனிமேல் "திவ்யாங்' (அதீத திறனுடையோர்) என்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில், "மாற்றுத் திறனாளிகள் அதீத திறமை கொண்டவர்கள்; அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என அழைப்பதற்குப் பதிலாக, "அதீத திறமை கொண்டவர்கள்' எனக் குறிப்பிட வேண்டும்' என்றார்.
அதையடுத்து பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பெயர் மாற்றம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.
No comments:
Post a Comment