18.05.2016
வேளாங்கண்ணியில் உள்ள சிறப்புப் பள்ளியில் பயின்ற மாணவி பி. குணசுந்தரி பிளஸ் 2 தேர்வில் 517 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வேளாங்கண்ணி கிறிஸ்துராஜா சிறப்புப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி பி. குணசுந்தரி (வாய்பேச முடியாது, காது கேளாதவர்) 517 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத் திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ்-85, ஆங்கிலம் (விலக்கு அளிக்கப்பட்டுள்ளது), வரலாறு-135, பொருளியல்-105, வணிகவியல்-105, கணக்குப் பதிவியல்-87.
வேதாரண்யம் மாணவர் 2-ஆம் இடம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அ.விக்னேஷ் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 427 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்றுள்ளார்.
இவரது தந்தை அன்பழகன். இவர் வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் வசிக்கிறார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-97, (ஆங்கிலம் விலக்களிப்பு) இயற்பியல்- 80, வேதியியல்-80, தாவரவியல்-90, விலங்கியல்-80.
No comments:
Post a Comment