27.05.2016,
திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்ததாவது:
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவிடும் வகையில், மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தையல் தெரிந்து இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு 18-க்கு மேலும் 45-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அட்டை பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளிகள் உரிய விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment