FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, May 23, 2016

காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர்

23.05.2016
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அஜேய் ஷிர்கே தேந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த 6 கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அனுராக் தாகூர் தலைவரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜேய் ஷிர்கே பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோதா கமிட்டி பரிந்துரைகள்


புதிய தலைவராக பொறுப்பெற்ற பிறகு மும்பையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சவால்கள் இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகளும் இருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய் வேன். இந்திய கிரிக்கெட் வாரியத் தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இதில் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் சிபாரிசுகளை அமல்படுத்துவோம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ள ஒரு விளையாட்டின் மாண்புகளை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள் ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வோம்.

இலவச டிக்கெட்

கிரிக்கெட் மைதானங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது 10 சதவீத டிக்கெட்டுகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவசமாக ஒதுக்கப்படும். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப் பதற்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment