FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, May 24, 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்

24.05.2016,  தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

உதவி தொகை
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவி தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், 12–ம் வகுப்பு, மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 31.3.2016–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு
பயன்தாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களில், 10 வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள கல்வித்தகுதிக்கு ரூ.600–ம், 12–ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000–ம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு ஏதும் கிடையாது. 10 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட (மாற்றுத்திறனாளிகளின் பெயரில் துவங்கப்பட்ட) வங்கி கணக்கு புத்தகம், ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வந்தாலோ அல்லது இதற்கு முன்பு பயன்பெற்றிருந்தாலோ வரத் தேவையில்லை.

30–ந் தேதி கடைசி நாள்
வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 30–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment