FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, May 18, 2016

பேச்சு, காதுகேளாதோர் பள்ளிகளில் ராமாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை

18.05.2016, ஆலந்தூர்

பிளஸ்–2 தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவர்களில் ராமாபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.

மாணவர் கே.பூபாலன் 820 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவர் தமிழில் 135, பொருளாதாரத்தில் 176, வணிகவியலில் 161, கணக்கு பதிவியலில் 183, வர்த்தக கணிதத்தில் 165 மதிப்பெண்கள் பெற்றார்.

பி.விக்னேஷ் 727 மதிப்பெண்கள் பெற்று 2–ம் இடத்தை பிடித்தார். அவர் தமிழில் 117, வணிகவியலில் 149, கணக்கு பதிவியலில் 161, அலுவலக மேலாண்மையில் 102, தட்டச்சு பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றார்.

பி.சதீஷ்குமார் 681 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடம் பிடித்தார். அவர் தமிழில் 115, வணிகவியலில் 147, கணக்கு பதிவியலில் 147, பொருளாதாரத்தில் 138, வர்த்தக கணிதத்தில் 134 மதிப்பெண்கள் பெற்றார்.

No comments:

Post a Comment