FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடம் ‘பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம்’

17.05.2016, ஈரோடு,
காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்தார். பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம் என்று கூறினார்.

மாநில அளவில் 2–வது இடம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் காதுகேளாதவர், வாய்பேசமுடியாதவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் 1,000 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த காதுகேளாத மாணவி கே.திவ்யலட்சுமி 1,000–க்கு 921 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 179, பொருளாதாரம் – 187, வணிகவியல் – 170, கணக்கு பதிவியல் – 191, வணிகக்கணிதம் – 194. (பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும். அதன்படி மாணவி திவ்யலட்சுமி ஆங்கில பாடம் எழுதவில்லை).

பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யலட்சுமிக்கு பள்ளிக்கூட தாளாளர் மங்களவதி, தலைமை ஆசிரியை இந்திராணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி திவ்யலட்சுமி ஈரோடு பவர்ஹவுஸ் வீதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை யு.கண்ணன். வக்கீலாக உள்ளார். தாயார் தீபலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி திவ்யலட்சுமி கூறியதாவது:–

எனக்கு பிறவிலேயே காதுகேளாத தன்மை இருந்தது. இதனால் பேச்சு சரியாக வரவில்லை. 5 வயதில் எனக்கு காது கேளாத குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காதொலி கருவிகள் பொருத்தப்பட்டு பேச்சு பயிற்சி அளித்தனர். இதற்காக எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சைகள் கொடுத்தனர்.

காதொலி கருவி

80 சதவீதம் குறைபாடு இருந்ததால் தொடர்ந்து காதொலி கருவி பயன்படுத்தி வந்தேன். பின்னர் யோகாசனம், தியானம் ஆகியவை தொடர்ச்சியாக செய்து காதுகேளாத தன்மையில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் சேர்ந்து தோழி சுஸ்மிதா படித்தார். அவர் 722 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவருக்கும் காது கேட்காத குறைபாடு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் எங்களுக்கு தனிகவனம் செலுத்தி கை செய்கை மூலம் கற்றுக்கொடுத்தனர்.

எனவே பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பி.காம். படிக்க உள்ளேன். அதன்பிறகு போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி திவ்யலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment