FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, May 18, 2016

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை

17.05.2016, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பாளையங்கோட்டை பள்ளி மாணவர்களே மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவேன்ஸன் காதுகேளாதோர் பள்ளி மாணவர் எஸ். கண்ணன் 824 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே. ரவிகுமார் 822 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், பி. அருள்பாண்டி 818 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர் சி. கிருஷ்ணகாந்த் 1200-க்கு 1,101 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதே பள்ளி மாணவர் எஸ். சிவகுமார் 1077 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், மாணவர் பிரசன்னா பாசில் 1065 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

No comments:

Post a Comment