25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment