FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

18.05.2016
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான நஷ்ரத் 1,000-க்கு, 878 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஹனீபா கோவை செல்வபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். தாயார் குர்ஷித் இல்லத்தரசியாக உள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கோவையில் காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களை சேர்க்க அதிக அளவில் கல்லூரிகள் இல்லை. மேலும், அவர்கள் பட்டயப் படிப்பு முடிக்கும்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் வேலை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, பேஷன் டிசைனிங் படிப்பதே நஷ்ரத்தின் லட்சியம் என்றனர்.

அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் : தமிழ்-163, பொருளாதாரம்-183, வணிகவியல்-179, கணக்குப்பதிவியல்-195, வணிகக்கணிதம்-158.

அதே பள்ளியைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத மாணவி ஷாஜிதா ஆயிஷா 872 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த இவரது தந்தை முகமது முஸ்தபா, சுயதொழில் செய்து வருகிறார். தாயார் நஸ்ரத் பானு இல்லத்தரசி ஆவார்.

இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா கூறியதாவது:

பள்ளியில் சிறப்பான பயிற்சியும், தனிக் கவனம் செலுத்தி பாடத்தை கற்றுக் கொடுத்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-158, பொருளாதாரம்-187, வணிகவியல்-177, கணக்கு பதிவியல்-184, வணிக கணிதம்-166.

இதேபோல், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் பூபதி வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பொள்ளாச்சி வக்கம்பாளையத்தை சேர்ந்த இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-106, ஆங்கிலம்-113, புள்ளியியல்-124, பொருளாதாரம்-124, வணிகவியல்-70, கணக்குபதிவியல்-172 என மொத்தம் 709 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment