FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, May 17, 2016

ஒடிஸா ஊராட்சித் தேர்தலில் இனி பேச்சுத் திறனற்றோரும் போட்டியிடலாம்: மாநிலப் பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

17.05.2016, ஒடிஸா மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல்களில் வாய் பேச இயலாதோர், செவித் திறனற்றோர், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இனி போட்டியிடும் வகையில் ஒடிஸா ஊராட்சி சட்டங்கள் (திருத்த) மசோதா-2016 மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் இன்மை, காசநோய், தொழுநோய் போன்ற குறைபாடுகளை நவீன மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்பதால் தற்போது ஊராட்சி சட்டங்களில் மேற்கண்டவர்களும் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கும் ஷரத்துகள் தேவையற்றதாகிவிட்டன. எனவே மேற்கண்ட நபர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடையாக இருக்கும் சட்டப் பிரிவுகளை தற்போது அரசு திருத்தவிருக்கிறது என்று சட்டத் துறை அமைச்சர் அருண் குமார் சாஹு பேரவையில் ஒப்புதலுக்காக மசோதாவை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை. மையப் பகுதியில் தொடர் தர்னாவில் அமர்ந்திருந்த காங்கிரஸ், பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனினும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் பிஜு ஜனதாதள உறுப்பினர்களாக பிரஃபுல்ல சமாலும், அமர் பிரசாத் சத்பதியும் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். ஒடிஸா கிராம ஊராட்சி சட்டம்-1964, ஒடிஸா பஞ்சாயத்து சமிதி சட்டம்-1959, ஒடிஸா மாவட்டப் பஞ்சாயத்துச் சட்டம்-1991 ஆகிய 3 சட்டங்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றார் சாஹு.

இந்த சட்டத் திருத்தம் மூலம் மேற்கண்ட காது கேளாத, வாய் பேச முடியாத நபர்கள், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் இனி உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியும். 

இதையடுத்து மாநிலத்தில் இருக்கும் 2.12 லட்சம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் 45 காச நோயாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment