புது தில்லி, 27 May 2016
மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் சட்டப்பிரிவில் மேலும் சில குறைபாடு உடையவர்களையும் சேர்க்க வழிவகை செய்யும் வரைவு மசோதா பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் இரண்டாண்டு நிறைவையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு பயனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசு கடுமையாகப் பாடுபட்டுவருகிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வரைவு மசோதாவின்படி ஊனம் தொடர்பான வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 குறைபாடுகளோடு மேலும் 12 குறைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருபவர்களோடு, ஏனைய குறைபாடுகள் உடைய மேலும் பலரும் அந்த உதவிகளைப் பெற முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே கலந்தாலோசனை நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, அது பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார் கெலாட்.

No comments:
Post a Comment