FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, May 25, 2016

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும்: அனுராக் தாக்கூர் பேட்டி

25.05.2016 மும்பை:
 இந்தியாவில் பிரபலமாகவுள்ள விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது என்று பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்களில் மழை நீரை சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய விளம்பரம் இன்று வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

பி.சி.சி.ஐ.யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன் என தாக்கூர் பேட்டியளித்துள்ளார். ஷசாங் மனோகர் பதவி விலகியதை அடுத்து இந்திய கட்டுப்பாட்டுத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் மாதங்களில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள் நடத்த உள்ளதாக அனுராக் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment