27.05.2016
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கவுண்டம்பாளையத்தையடுத்த செஞ்சிலுவை சங்க காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 301 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஹரிகுமார் 249 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யமுனா, ஹெச்.சல்மான் பரிஷ் 229 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
காது கேளாத குழந்தைகளுக்கு பொதுத் தேர்வில் மொழிப்பாட விலக்கு அளிக்கப்படுவதால் இவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுத வேண்டியதில்லை. ஆதலால் இவர்களது மொத்த மதிப்பெண் 400 ஆக கணக்கிடப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளியின் தாளாளரும், கோவை செஞ்சிலுவை சங்க கிளைத் தலைவருமான நந்தினி ரங்கசாமி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment