22.01.2016, தர்மபுரி,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி அலுவலர் பணி
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் பயிற்சி பிரிவில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள சுமார் 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் ஸ்கில் டிரெயினிங் இணைய தள முகவரியில் சென்று விளக்ககுறிப்பில் கண்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க உரிய தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ், 3 ஆண்டு முன் அனுபவம் அல்லது உரிய தொழில் பழகுனர் சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது உரிய 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ அல்லது டெக்னாலஜி பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
வயது வரம்பு
ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் தொழில் பழகுனர் சான்றிதழ் பெற்ற பொது பிரிவிற்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 வயதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40-ம் வயது வரம்பாகும். 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ரூ.50-க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவோலையும் பிற வகுப்பினருக்கு ரூ.150-க்கான வங்கியின் வரைவோலையும் எடுத்து விண்ணப்பித்த ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் உரிய சான்றிதழ்களில் சுய ஒப்பமிட்ட நகல்களுடன் தர்மபுரி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து ஒப்புகை சீட்டு பெற்று செல்லலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 1-ந் தேதி கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு 2½ மணிநேரம் நடக்கும். மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுசீட்டில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் தேர்வு மையத்தில் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களில் 5 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் நேர்முகத்தேர்வுக்கு அனுப்பபடுவார்கள். இந்த அரிய வாய்ப்பை மாவட்டத்தை சேர்ந்த தகுதிஉடையவர் பயன்படுத்தி கொள்ளுமாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெகந்நாதன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment