FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, January 27, 2016

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு 2வது முறையாக அபராதம் விதிப்பு

26.01.2016
பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காத தமிழக அரசுக்கு, இரண்டாவது முறையாக 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயண ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு குறித்து 2 வார காலத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி 3 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, தமிழக அரசுக்கு நீதிபதிகள் 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment