FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 19, 2016

ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்!



19.01.2016, பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ.

ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.



நடாலைக் கவர்ந்தவர்

பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் எடுத்தது முதல், தன் கவனம் முழுவதையும் டென்னிசின் மீதே செலுத்தியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரராய் வரவேண்டும் என்பதே லீயின் கனவு. அது மிகவும் கடினம் என்று அறிந்தபோதும் ஒவ்வொரு படியாய் முன்னேறி, தனது லட்சியத்தை அடைய உழைத்து வருகிறார். இதுவரை ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வந்த லீ, தற்போது சீனியர் வீரர்களுக்கு சவால் விட தயாராகிவிட்டார்.

2015-ம் ஆண்டு மட்டும் 7 டென்னிஸ் தொடர்களில் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ஒரு வருடம் முன்பு 505 வது இடத்திலிருந்த லீ, தனது அபார ஆட்டத்தால் சில மாதங்களிலேயே 272 இடங்கள் முன்னேறி, இன்று 233 வது இடத்தில் இருக்கிறார். இவரது அசாத்திய ஆட்டத்தைப் பார்த்த, 14 முறை கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் கூட, “தடைகளை உடைத்து முன்னேறி வரும் லீ டக் ஹீயின் வாழ்க்கை, நாமும் போராட வேண்டும் என்று நமக்குக் கத்துக்கொடுக்கிறது” என்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்திருந்தார்.

என்னால் முடியும்

“எனக்கு காது கேளாததை நான் எனது பலவீனமாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு பலம் சேர்க்கிறது. என்னால் எனது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. பார்வையாளர்களோ, எதிர்த்து விளையாடும் வீரர்களோ என்ன சொல்வார்கள் என்று எனக்குக் கேட்காததால், எனக்கு கவனச் சிதறல்கள் இல்லை. உண்மையில் இதை நான் என் பலமாகவே பார்க்கிறேன். என் லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் நான் ஓயப்போவதில்லை” என்று தனது பேச்சால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார் லீ.

லீயின் வாழ்க்கை நடாலுக்கு மட்டுமல்ல ‘நம்மால் முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

வெற்றிகள் பல குவித்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் லீ…!

No comments:

Post a Comment