FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 30, 2016

கதை சொல்லிகள் இல்லை: பேச்சுத்திறன் இழக்கும் பிஞ்சுகள்

26.01.2016, கோவை : செவித்திறன் குறைபாடு இல்லாத நிலையிலும், மன அழுத்தம், தனிமை, கதை சொல்லிகள் இல்லாத காரணங்களால், பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், 60 சதவீத குழந்தைகள், உச்சரிப்பு திறனை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்து, மூன்று மாத்திலே சத்தத்தை கேட்கும் திறனை பெறுகிறது. ஆறு மாதத்தில், முணுமுணுப்பாக வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாக பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம்.

இந்த ஆரம்பகட்ட நிகழ்வுகள், தாமதமாக நடந்தாலோ அல்லது எவ்வித சத்தத்திற்கும் பதிலளிக்காமல் இருப்பதை தான், குறைபாட்டுக்கான முதல் அறிகுறியாக கருத வேண்டும். செவித்திறன் பாதித்த குழந்தை, பேச முனையாமல், சைகையை மட்டுமே நாடும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளின் கேட்கும் திறனை பொறுத்து, குணமாக்க முடியும். இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்காகவே, கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும், மாற்றுத்திறனளிகள் நலத்துறை அலுவலகத்தினுள், காது கேளாத குழந்தைகளுக்கான ஆரம்பநிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

இங்கு, எட்டு விநாடிக்குள் கேட்கும் திறன் பரிசோதித்து, தகவல் அளிக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுதவிர, அரசு மருத்துவமனை உதவியோடும் ஆரம்ப பரிசோதனை செய்தும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தொடர் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வேலைப்பளு, கூட்டுக்குடும்ப பிளவு உள்ளிட்ட பல காரணங்களால், 80 சதவீத பெற்றோர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை.

மேலும், கூட்டு குடும்பத்தில், கதை சொல்லிகள் எனும் மூத்தோர் இருப்பதால், குழந்தைகள் அதிக உரையாடலை கேட்கவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருந்தது. இந்நிலை தற்போது குறைந்து வருவதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், மன அழுத்தம், தனிமை, பேச வாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களாலே, 60 சதவீத குழந்தைகள் எவ்வித செவித்திறன் கோளாறுகளும் இல்லாத நிலையிலும், வார்த்தைகளை உச்சரிக்க கூட திணறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு, குழந்தைகளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, சில எளிய பயிற்சிகளை அளித்தாலே போதுமானது. பெரும்பாலும், இதுபோன்ற குறைபாட்டை, பள்ளி செல்லும் வயதில் அறிந்து பின், சிகிச்சைக்கு வருவோரே அதிகம்.

ஒலியியல் துறை அதிகாரி ஸ்வர்ணபவானி கூறுகையில்,''பேச்சு பயிற்சிக்காக வரும் குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தபடி, மையத்தில் வரைபடங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சார்ட்டுகள், கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வசதிகள், அதிநவீன கருவிகள் உள்ளன.

குறைபாடுடன் வரும் குழந்தைகளுக்கு, சிகிச்சையும், பயிற்சியும் மட்டுமே குணமாக்கும் மருந்தாகும். ஆனால், பேச வாய்ப்பு கிடைக்காததால், உச்சரிக்க தடுமாறுதல், மாற்று நபர்களை கண்டு மிரளும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு மிக அவசியம். சமூக சூழலில், மற்றவர்களோடு உரையாடவும், பேசவும், குழந்தைகள் பேசுவதை கவனிக்கவும், நேரம் ஒதுக்குவது மிக அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment