05.01.2016, கிருஷ்ணகிரி: நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதாந்திர உதவித்தொகை வாங்கி வந்த பலருக்கு, உதவிக்கு தொகை வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக ஊனம் உள்ளவர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய, நான்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் எதிரே, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை நடத்தி, அனைவருக்கும் உதவித்தொகைய கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment