FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 7, 2016

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை திட்டம் வேலைவாப்பு அதிகாரி தகவல்


06.01.2016, தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலைவாப்பு அதிகாரி து.நாகேந்திரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற முடியாது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி
இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்–2, மற்றும் பட்டயப் படிப்பு முடித்து உள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

31.12.2010–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் அதை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுத, படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்து இருந்தாலும் போதும். விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேணடும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், அலுவலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவு தாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து.நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment