27.01.2016, சென்னை: அரசு பணி, பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக உயர் கல்வித் துறை செயலாளருக்கு 2வது முறையாக சென்னை ஐகோர்ட் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது. தமிழ்நாடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதுகுறித்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பும் கூறியுள்ளது. ஆனால், கடந்த முறை நடைபெற்ற தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எதுவும் வழங்கவில்லை.
தகுதி உடைய அனைத்து துறைகளிலும், அனைத்து வகை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. மொத்த பணியிடத்தில் இதனை வழங்க வேண்டும். ஆனால் இட ஒதுக்கீட்டை அரசு அதிகாரிகள் முறையாக அமல் படுத்துவது இல்லை. இந்த நடவடிக்கை சமவாய்ப்பு என்ற அரசியல் அமைப்புக்கு எதிரானது. மாற்றுத்திறனாளிகளின் அறியாமையை பயன்படுத்தி இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க கூடாது. இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன் கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளிகல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நீதிபதி புஷ்பசத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பாக அரசு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி, பள்ளிக்கல்வி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
உயர் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என ஏற்கனவே 10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டுள்ளது. அதனை செலுத்திவிட்டீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வக்கீல் இன்னும் செலுத்தவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளருக்கு மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கின்றோம். பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் கோரப்பட்டது, அந்த கால அவகாசம் அளிக்கின்றோம். இரண்டு வாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதே போன்று ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும், தற்போது விதிக்கப்பட்ட அபராத்தையும் இரண்டு வாரத்தில் சமரச தீர்வு மையத்தில் செலுத்த வேண்டும். வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment