01.01.2016, இந்துார்: சிறு வயதில், எல்லை தாண்டி, பாகிஸ்தான் சென்று, மத்திய அரசின் நடவடிக்கையால், 15 ஆண்டுகளுக்குப் பின், சில மாதங்களுக்கு முன், இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத, மாற்றுத் திறனாளி கீதாவை, பெற்றோருடன் சேர்த்து வைப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, தொண்டு நிறுவனம், 18 - 20 வயது இருக்கும் என கூறப்படும் கீதாவை பராமரித்து, திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பின், சைகை மொழிப் பிரிவின் தலைவர், மோனிகா பஞ்சாபி வர்மா கூறியதாவது:இந்துாரில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சுஷ்மா சுவராஜை, கீதா சந்தித்தார். அப்போது, சுஷ்மா சுவராஜ், கீதாவை கட்டித் தழுவி, மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பின், அவர், 'எப்பாடு பட்டாவது உன்னை பெற்றோரிடம் சேர்ப்பேன்' என, கீதாவுக்கு உறுதி அளித்தார். கீதா, தன் கையால் நெய்த கம்பளி ஆடையை, அமைச்சரிடம் காட்டி, பாராட்டு பெற்றார்.இவ்வாறு அவர் கூறினார்.அண்மையில், சுஷ்மா சுவராஜ், கீதாவின் சிறு வயது படங்களை, 'டுவிட்டர்' வலைதளத்தில் வெளியிட்டார். அதைக் கண்டு, மத்திய பிரதேசம், ஜபல்பூரைச் சேர்ந்த, அனீஸ் பீ என்பவர், 'என் மகள் தான் கீதா' என கூறி, அதற்கான ஆதாரங்களை, இந்துார் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங்கிடம் வழங்கியுள்ளார்.
அத்துடன், கீதாவுக்கு உரிமை கோரும், மேலும் நான்கு குடும்பங்கள் அளித்துள்ள ஆதாரங்களும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment