29.01.2016, பெ.நா.பாளையம்: வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆங்கிலம்- - இந்தி சைகை மொழி அகராதியை, சுவாமி விவேகானந்தா பல்கலை தயாரித்துள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பல்கலை செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வியை பாடமாக கொண்ட பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளன.
கடந்த, 2001ல், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆங்கில சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. 2015 பிப்., மாதம், தமிழகத்தில் உள்ளவர்களுக்காக, ஆங்கிலம்- - தமிழ் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. தற்போது, ஆங்கிலம் -- இந்தி சைகை மொழி அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தா பல்கலையினர் கூறுகையில், 'இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தேவையான இடங்களில், ஏற்கனவே உள்ள சைகை மொழியில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 524 பக்கம் உடைய அகராதியில், 1,500க்கும் மேற்பட்ட சைகைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 5ல் நடக்கும் விழாவில் அகராதி வெளியிடப்படுகிறது' என்றனர்.

No comments:
Post a Comment